சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஜம்மு & காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி ராஜேஷ் பிண்டால் நியமனம்
Posted On:
08 DEC 2020 5:59PM by PIB Chennai
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2020 டிசம்பர் 9 முதல் நீதிபதி திரு ராஜேஷ் பிண்டால் கடமையாற்றுவார்.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜேஷ் பிண்டால், அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதாக அரசியல் சாசனம் தனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் கீழ் குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த நீதிபதி செல்வி கீதா மிட்டல் ஓய்வு பெற்றதை அடுத்து, இந்த நியமனத்தை குடியரசு தலைவர் செய்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்த திரு ராஜேஷ் பிண்டால், 1985-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டார். 2006-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679132
**********************
(Release ID: 1679143)
Visitor Counter : 236