பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்

Posted On: 08 DEC 2020 5:10PM by PIB Chennai

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராணுவ சேவை படைப்பிரிவு விநியோகம் செய்கிறது. இந்தப் படைப்பிரிவு உதயமான 260வது ஆண்டு தினத்தை, இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் எம்கேஎஸ் யாதவ், தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  இதே போன்ற நிகழ்ச்சிகள், நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள ராணுவ சேவை படைப்பிரிவு மையங்களில் நடந்தன.

இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், ‘தியாகிகளுக்கான ஓட்டம்என்ற கருப்பொருளில் 260 கி.மீ தூர ஓட்டம், சாந்திமந்திர் போர் நினைவிடத்திலிருந்து தில்லியில் உள்ள போர் நினைவிடம் வரை நடத்தப்பட்டது. டிசம்பர் 4ம் தேதி தொடங்கிய இந்த ஓட்டம், இன்று நிறைவடைந்தது. இதில் லெப்டினன்ட் கர்னல்  இந்தர்ஜித் சிங் தலைமையில் 13 பேர் கலந்து கொண்டனர். உடல் தகுதி இந்தியா இயக்கத்தை ஊக்குவிக்க இந்த ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஓட்டத்தை மேற்கு மண்டல ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.சிங் தொடங்கி வைத்தார். இந்தக் குழுவினர் தாங்கள் செல்லும் வழியில், அம்பாலா, குன்ச்புரா, ராய் பகுதியில் உள்ள மோதிலால் நேரு விளையாட்டு பள்ளி ஆகிய இடங்களில் உள்ள போர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.  இந்தக் குழுவினரை தில்லியில் தேசிய போர் நினைவிடத்தில் லெப்டினன்ட் ஜெனரல் எம்கேஎஸ் யாதவ் வரவேற்றார்.  

**********************



(Release ID: 1679134) Visitor Counter : 156