தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வாய்ப்பு - இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-இல் அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத்

Posted On: 08 DEC 2020 1:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020- காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். “உள்ளடக்கிய புத்தாக்கம்- திறன்மிகுந்ததும், பாதுகாப்பானதும், நிலையானதுமானதுஎன்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்பிரதமரின் தொலைநோக்கானதற்சார்பு இந்தியா’, ‘டிஜிட்டல் உள்ளடக்கம்’, ‘நீடித்த மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் புதுமை' ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். அந்நிய, உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, தொலைத்தொடர்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்நுட்பம் மேம்படும் நிலையில், செல்போன்கள் மற்றும் சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் உருவாகி வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தார். மின்னணுக் கழிவுகளை நல்ல முறையில் கையாள்வதற்கும், சுழற்சிப் பொருளாதாரத்தை உருவாக்கவும் பணிக் குழு உருவாக்க முடியுமா என்பது பற்றி பங்கேற்பாளர்கள் யோசிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்எதிர்காலத் தேவையில் நாம் வேகமாக முன்னேறி, பல மில்லியன் இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக, உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வரக் கூடிய தொழில்நுட்பப் புரட்சியில் மக்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து, திட்டமிட வேண்டியது முக்கியம் என்று பிரதமர் கூறினார்.

செல்போன் தொழில்நுட்பம் உள்ள காரணத்தால் தான், பல மில்லியன் பேருக்கு, பல பில்லியன் டாலர் அளவுக்கான ஆதாயங்களை அளிக்க முடிந்துள்ளது என்றும், இதனால் தான்  பெருந்தொற்றுக் காலத்தில் ஏழைகளுக்கும், பிரச்சினையில் சிக்க வாய்ப்புள்ளவர்களுக்கும் நம்மால் உதவிகளை அளிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்செல்போன் தொழில்நுட்பம் இருப்பதால் தான் பல பில்லியன் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளைச் செய்ய முடிகிறது, அது பரிவர்த்தனைகளை முறைப்படுத்துபவையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் ஆக்கச் செய்துள்ளது என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், கொவிட்- 19 பெருந்தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமும், மெய்நிகர் தகவல் தொடர்பு சாதனங்களும் பெருமளவு பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். 85% தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் வீடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசுகையில், நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை வழங்கும் பாரத் நெட் 2020 திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை வழங்கும் தேசிய பிராட்பேண்ட் இயக்கம் குறித்தும் அமைச்சர் பேசினார்.

செல்போன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையின் மூலம் உலக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி, ஏற்றுமதி செய்யுமாறு உற்பத்தியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறிய அவர், செயற்கை நுண்ணறிவை மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, தொழில்துறை, அரசு, கல்வி, இதர பங்குதாரர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து  எதிர்காலத்திற்குத் தேவையான புதிய தீர்வுகள் குறித்து விவாதிக்கும் முன்னணி தளமாக இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020 விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொலைத்தொடர்புத் துறை தலைவரும், செயலாளருமான திரு அன்ஷூ பிரகாஷ், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கத்தின் தலைமை இயக்குனர் லெப்டினண்ட் ஜெனரல் டாக்டர் எஸ் பி கோச்சர் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679041

*******

(Release ID: 1679041)



(Release ID: 1679110) Visitor Counter : 196