ரெயில்வே அமைச்சகம்

தில்லி-வாரணாசி அதிவேக ரயில் தடத்துக்காக லிடார் ஆய்வு தொழில்நுட்பம்

प्रविष्टि तिथि: 07 DEC 2020 6:42PM by PIB Chennai

தில்லி-வாரணாசி அதிவேக ரயில் தடத்துக்காக, ஹெலிகாப்டர் மீது லேசர் கருவியைப் பொருத்தி, லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள தேசிய அதிவேக ரயில் கழகம் முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கள ஆய்வை நடத்துவதற்காக இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வின் மூலம், தில்லி-வாரணாசி அதிவேக ரயில் தடத்துக்கு தேவைப்படும் நிலத்தின் அளவு, ரயில் நிலையங்கள், பணிமனைகள் அமைய உள்ள இடங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678878

------


(रिलीज़ आईडी: 1678915) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी