ஜல்சக்தி அமைச்சகம்

நீர், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த நதிகள் இணைப்பு மிகவும் அவசியம்: அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா

Posted On: 07 DEC 2020 6:26PM by PIB Chennai

தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் 34-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் நதிகளின் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 18-வது கூட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா இன்று தலைமை தாங்கினார்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நீர் வளத்துறை அமைச்சர்கள், நீர் வளத்துறை மற்றும் கங்கை புத்தாக்கத் துறையின் செயலாளர், நதிகளின் இணைப்புக்கான பணிக் குழுவின் தலைவர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் ஆலோசகர், பல்வேறு மத்திய, மாநில அரசு அமைப்புகளின் அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், நாட்டின், நீர், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தண்ணீர் பஞ்சம் உள்ள, வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் மழையை நம்பியுள்ள விவசாயப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கும்  நதிகளின் இணைப்பு மிகவும் அவசியம் என்று கூறினார்.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக திரு ரத்தன் லால் கட்டாரியா கூறினார்.

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயை நினைவு கூர்ந்த அமைச்சர், நதிகள் இணைப்பு என்பது அவரது கனவு, லட்சியம் மற்றும் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான திட்டம் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678869

 



(Release ID: 1678905) Visitor Counter : 100