பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பொருட்கள் : டிரைப்ஸ் இந்தியா அறிமுகம்

Posted On: 07 DEC 2020 5:38PM by PIB Chennai

பல லட்சக்கணக்கான பழங்குடி தொழில்முனைவோர் பெரிய சந்தைகளை சென்றடைய உதவும் அதே வேளையில், டிரைப்ஸ் இந்தியா நிறுவனம், பழங்குடியினர் பொருட்களை, குறிப்பாக இயற்கையான, வனத்தில் கிடைக்கும், பசுமையான 46 பொருட்களை இந்த வாரம் புதிதாகச் சேர்த்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வன பசுமை மற்றும் இயற்கை பொருட்களையும், பழங்குடி கலை மற்றும் கைவினைப் பொருட்களையும் டிரைப்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சிக் கூட்டமைப்பின் (டிரைஃபெட்) நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா, பழங்குடி மக்களின் வாழ்வை மாற்றியமைக்கவும், அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் டிரைப்ஸ் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பதை தாரக மந்திரமாகக் கொண்டு டிரைஃபெட் செயல்படுவதாக அவர் கூறினார்.

தேங்காய், எள், பாதாம், கடலை மாவு, வெண்ணையில் தயாரிக்கப்பட்ட சத்தான, சுவையான குக்கீஸ், தமிழகத்தின் மலையாளி பழங்குடியினரின் இயற்கை கம்பு, குதிரைவாலி, சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய அரிசி வகைகள், மஞ்சள் தூள், மூலிகை சோப்  உள்ளிட்ட பொருட்கள் இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் அனைத்தும் நாட்டில் உள்ள 125 டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், tribesindia.com  என்ற மின் வணிக தளத்திலும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678845

------


(Release ID: 1678893) Visitor Counter : 195