நிதி அமைச்சகம்

சர்வதேச காப்பீட்டு மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம் ஆனது

Posted On: 02 DEC 2020 7:08PM by PIB Chennai

சர்வதேச காப்பீட்டு மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் ஒப்புதலை சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம் பெற்றுள்ளது.

1994-இல் நிறுவப்பட்ட சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம், உலகின் 97 சதவீத காப்பீட்டு கட்டணங்களை உள்ளடக்கிய 200-க்கும் அதிகமான இடங்களில் இருக்கும் காப்பீட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒழுங்குமுறையாளர்களின் தன்னார்வ உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். சுவிட்சர்லாந்தில் இதன் தலைமையகம் உள்ளது.

இதன் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தின் காரணமாக, ஜி20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் இதர சர்வதேச தர நிர்ணய அமைப்புகளால் சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம் அடிக்கடி தொடர்பு கொள்ளப்படும்.

சர்வதேச காப்பீட்டு மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம் ஆனதின் மூலம், அந்த அமைப்பின் உலகளாவிய வலைப் பின்னலின் அணுகலைப் பெற்று, சர்வதேச ஒழுங்குமுறையாளர்களுடன் தகவல்கள் மற்றும் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677735

**********************



(Release ID: 1677806) Visitor Counter : 160