சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 கூடுதல் நீதிபதிகள் நியமனம்
Posted On:
02 DEC 2020 1:08PM by PIB Chennai
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, 10 கூடுதல் நீதிபதிகளை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
நீதிபதிகள் திரு கோவிந்தராஜூலு சந்திரசேகரன், திரு ஏ.ஏ.நக்கீரன், திரு வீராசாமி சிவஞானம், திரு கணேசன் இளங்கோவன், திருமதி ஆனந்தி சுப்ரமணியன், திருமதி கண்ணம்மாள் சண்முகசுந்தரம், திரு சத்தி குமார் சுகுமாரா குருப், திரு முரளி சங்கர் குப்புராஜூ, திருமிகு மஞ்சுளா ராமராஜூ நல்லையா மற்றும் திருமதி தமிழ்செல்வி டி.வலயபாளையம் ஆகியோரை மூப்பு வரிசை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
இவர்கள் பதவிக்காலம் அவரவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். நீதிபதிகள் திருமதி ஆனந்தி சுப்ரமணியன், திருமதி கண்ணம்மாள் சண்முகசுந்தரம் ஆகியோரின் பதவிக் காலம் பொறுப்பேற்கும் நாளில் இருந்து முறையே ஜூலை 30, 2022 மற்றும் ஜூலை 19, 2022 வரை நீடிக்கும் என நீதித்துறை டிசம்பர் 1ம் தேதி வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677627
*****
(Release ID: 1677627)
(Release ID: 1677648)
Visitor Counter : 169