அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியலையும், இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்வதே இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் லட்சியம்: டாக்டர் சேகர் சி மாண்டே

Posted On: 01 DEC 2020 8:40PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-வின் முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று ஜோர்ஹாட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் (சி எஸ் ஆர்-என் எஸ் டி) 2020 டிசம்பர் 1 அன்று நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, அறிவியலையும், இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்வதே இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் லட்சியம் என்றார்.

காணொலி மூலம் நடக்கவுள்ள இந்த வருடத்தின்  இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, 2020 டிசம்பர் 22-ஆம் தேதியில் இருந்து 2020 டிசம்பர் 25 வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677504

------

 


(Release ID: 1677543)
Read this release in: English , Urdu , Hindi , Telugu