பாதுகாப்பு அமைச்சகம்

2019-20 யூனிட் அப்ரிசியேஷன் விருதுகள் வழங்கப்பட்டன

Posted On: 01 DEC 2020 6:19PM by PIB Chennai

அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, கடந்த ஓராண்டில் சிறப்பாக செயல் புரிந்த ஜாட் படைப்பிரிவின் 12 வது காலாட்படை, உத்குரோஷ் கடற்படை விமான தளம், தன்வந்திரி இந்திய கடற்படை மருத்துவமனை கப்பல் ஆகியவற்றிற்கு 2019-20 ஆண்டுக்கான யூனிட் அப்ரிசியேஷன் விருதை இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்று விருது பெற்ற பிரிவினர், கொவிட் பெருந்தொற்று உள்ளிட்ட சவாலான தருணங்களிலும் அதீத ஈடுபாடு மற்றும் கடின உழைப்பை அளித்ததாகக்  குறிப்பிட்டு அவர்களுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜாட் படைப்பிரிவின் 12-வது காலாட்படை வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் திறம்பட செயல்பட்டதற்காக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மக்களைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து வான் பாதுகாப்பில் ஈடுபட்ட  உத்குரோஷ் விமான தள வீரர்களையும், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 700க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கி அவர்கள் அனைவரையும் குணமடையச் செய்த தன்வந்திரி இந்திய கடற்படை மருத்துவமனை கப்பல் வீரர்களையும் அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677435

------(Release ID: 1677536) Visitor Counter : 8