ரெயில்வே அமைச்சகம்

பனாரஸ் ரயில் இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை நவம்பர் மாதம் 40 இன்ஜின்களைத் தயாரித்து சாதனை

Posted On: 01 DEC 2020 4:35PM by PIB Chennai

பனாரஸ் ரயில் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் 31 மின்சார ரயில் இன்ஜின்களைத் தயாரித்திருந்ததை முறியடித்து நவம்பர் மாதத்தில் 6000 குதிரை திறன் கொண்ட 40 ரயில் இன்ஜின்களை தயார் செய்துள்ளது. புனித தேவ் தீபாவளி நாளன்று இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு வினோத் குமார் யாதவ் வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் இஞ்சின் தயாரிப்புத் தொழிற்சாலையில் இருந்து 40-வது 6,000 குதிரை திறன் கொண்ட மின்சார ரயில் இன்ஜினை காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு வினோத் குமார் யாதவ், கொவிட் சவால்களுக்கு இடையே பனாரஸ் ரயில் இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் சிறப்பாக பணிபுரிந்து மைல்கல் சாதனையைப் படைத்துள்ளதற்கு  அவர்களைப் பாராட்டினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பனாரஸ் ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை 168 மின்சார ரயில் இன்ஜின்களை தயாரித்தது என்றும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை அதை விட கூடுதலாக மொத்தம் 169 இரயில் இஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ரயில் இன்ஜின் தயாரிப்புத் துறையில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், 9000 குதிரைத்திறன் கொண்ட ரயில் இன்ஜின்களைத் தயாரிக்கும் நோக்கத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677390

                                                                                 -----(Release ID: 1677498) Visitor Counter : 20