பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மத்தியப் பிரதேச பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிரபலப்படுத்தும். முதல் காணொலி ஆதி மகோத்சவ விழா : மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடக்கம்

Posted On: 01 DEC 2020 4:15PM by PIB Chennai

மத்தியப் பிரதேச பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிரபலப்படுத்தும் முதல் காணொலி ஆதி மகோத்சவ விழாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா இன்று தொடக்கி வைத்தார்.

மத்தியப் பிரதேசத்தின் முதல் மெய்நிகர் ஆதி மகோத்சவ விழா, market.tribesindia.com என்ற இணையதளத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இதை  மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் 3,500-க்கும் மேற்பட்ட பழங்குடியின கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஆதி மகோத்சவம் தேசிய பழங்குடியினர் விழா. மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகமும், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பின்(டிரைஃபெட்) கூட்டு முயற்சியில் இந்த விழா நடத்தப்படுகிறது. பழங்குடியினர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி, அவர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே டிரைஃபெட் அமைப்பின் நோக்கம். நாட்டின் பழங்குடியினர் மேம்பாட்டில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

-----(Release ID: 1677496) Visitor Counter : 4