புவி அறிவியல் அமைச்சகம்
வட இந்தியாவில் குளிர் காலத்தில் இயல்புக்கும் குறைவான வெப்பநிலை-இந்திய வானிலைத் துறை தகவல்
Posted On:
29 NOV 2020 6:27PM by PIB Chennai
வட இந்தியாவில் குளிர்காலத்தில் 2020 டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை இயல்புக்கும் குறைவான வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலைத் துறை கடந்த 2016ம் ஆண்டு முதல் பருவகால முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குளிர்கால வெப்பநிலை குறித்து இந்திய வானிலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் வடக்கு, வடமேற்கு, மத்தியப் பகுதி மற்றும் கிழக்கிந்திய பகுதியில் வரும் டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புக்கும் குறைவானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், மேற்கு கடலோர பகுதியின் சில பகுதிகள், நாட்டின் தெற்கு தீபகற்ப பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புக்கு அதிகமாக இருக்கும்.
இவ்வாறு இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677015
*******************
(Release ID: 1677067)
Visitor Counter : 130