தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அக்டோபர் மாதத்திற்கான அகில இந்திய தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் வெளியீடு

Posted On: 28 NOV 2020 4:50PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அமைப்பு, 2020 அக்டோபர் மாதத்திற்கான அகில இந்திய தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த அக்டோபர் மாதம் தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 1.4 புள்ளிகள் உயர்ந்து 119.5 ஆக இருந்தது. செப்டம்பர் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை விட இது 1.19 சதவீதம் அதிகமாகும். இதேபோல் கடந்த ஆண்டு இதே மாதத்தின் குறியீட்டு எண்ணை விட இது 0.93 சதவீதம் அதிகமாகும்.

தற்போதைய குறியீட்டு எண்ணின் அதிகபட்ச உயர்வைப் பொருத்தவரை, 1.29 சதவீதம் புள்ளிகள் உணவு மற்றும் குளிர்பானங்களால் ஏற்பட்டுள்ளன.

கோழி இறைச்சி, கோழி முட்டை, ஆட்டு இறைச்சி, கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், பச்சை மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், பட்டாணி, உருளைக்கிழங்கு, வீடுகளுக்கான மின்சாரம், மருத்துவர்களுக்கான கட்டணம், பேருந்து கட்டணம்  உள்ளிட்டவை குறியீட்டு எண் உயர்வுக்குக் காரணமாக இருந்தன.

எனினும் கோதுமை, மீன், தக்காளி, ஆப்பிள் முதலியவை குறியீட்டில் வீழ்ச்சி அடைந்தது, உயர்வைதைத் தடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676747

                                                                 -----



(Release ID: 1676817) Visitor Counter : 146