பிரதமர் அலுவலகம்
ஹைதராபாத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கி வரும் பாரத் பயோடெக் ஆய்வகத்தை பிரதமர் பார்வையிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2020 3:15PM by PIB Chennai
கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்கான தம்முடைய மூன்று நகர பயணத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
"ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து குறித்து விளக்கினார்கள். இதுவரையிலான அவர்களது பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளை பாராட்டினேன். தடுப்பு மருந்தை துரிதமாக உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இவர்கள் இணைந்து பணியாற்று கிறார்கள்," என்று டிவிட்டர் பதிவொன்றில் திரு மோடி கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்காவை இன்று காலை பிரதமர் பார்வையிட்டார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1676765)
வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam