சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
அசாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவி மையம் தொடக்கம்: ரூ.261.15 லட்சம் மதிப்பிலான உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2020 4:08PM by PIB Chennai
அசாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான உதவி மையத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் 4,147 பயனாளிகளுக்கு, ரூ.261.15 லட்சம் மதிப்பிலான 7,585 உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,551 மாற்றுத் திறனாளிகளுக்கும், ராஷ்ட்ரிய வயோஸ்ரீ திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் 596 பேருக்கும் உதவி பொருட்கள் வழங்கும் முகாமை, அசாம் மாநிலத்தின் நகான் நகரில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தவார்சந்த் கெலாட் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகாம், அசாமின் நகான் நகரில் உள்ள எல்பின்ஸ்டோன் பிபா பவனில் நடத்தப்பட்டது.
இங்கு மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மூன்று சக்கர வண்டி, சர்க்கர நாற்காலி, ஊன்று கோல், ஸ்மார்ட் குச்சிகள், ஸ்மார்ட் போன்கள், காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.
அசாமில் வட்டார அளவில் நடத்தப்படும் உதவி முகாம்களில், 4,147 பயனாளிகளுக்கு, ரூ.261.15 லட்சம் மதிப்பிலான 7,585 உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு தவார் சந்த் கெலாட் பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கு, பிரதமர் தலைமையின் கீழ், சமூக நீதித் துறை அமைச்சகம் புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு 7-லிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 3-லிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் :
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676458
*******************
(வெளியீட்டு அடையாள எண்: 1676484)
வருகையாளர் எண்ணிக்கை : 167