பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படை அகாடமியின் தேர்ச்சியடைந்தோர் அணிவகுப்பு நவம்பர் 28 அன்று நடக்கவிருக்கிறது

प्रविष्टि तिथि: 26 NOV 2020 6:24PM by PIB Chennai

இந்திய கடற்படை அகாடமியின் இலையுதிர்கால தேர்ச்சியடைந்தோர் அணிவகுப்பு நவம்பர் 28, சனிக்கிழமையன்று நடக்கவிருக்கிறது.

கொவிட் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு, பயிற்சி பெற்றவர்களின் பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் பங்கு பெறாமல் இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது.

இதற்கிடையே, மாலத்தீவு கடலோர காவல் படையின் கப்பலான எம் என் டி எஃப் சி ஜி எஸ் ஹூராவீயின் புத்தாக்கத்தை இந்திய கடற்படை வெற்றிகரமாக  செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் இந்த பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது.

71-து இந்திய அரசியலமைப்பு தினமான இன்று, கொச்சியில் உள்ள கடற்படை தென்மண்டல தலைமையகத்தில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசியல் சாசனத்தின் முன்னுரை மற்றும் அடிப்படை உரிமைகளை கடற்படை அலுவலர்கள் வாசித்தனர். பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் இணையம் மூலம் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்புகளை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676116

-----


(रिलीज़ आईडी: 1676255) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri