மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (முதன்மை) தேர்வு 2020 முடிவுகள் அறிவிப்பு

Posted On: 26 NOV 2020 4:34PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், 2020 அக்டோபர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில்  நடத்திய ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் (முதன்மை) தேர்வு 2020க்கான‌ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளனஇதன் அடிப்படையில் கீழ்கண்ட பதிவு எண்களைக் கொண்டவர்கள் நேர்முகத் தேர்வு/ தனித்தன்மை தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தற்காலிகமானவையாகும். தனித்தன்மை தேர்வுக்கு வருகையில் விண்ணப்பதாரர்கள் தங்களது வயது, கல்வித்தகுதி, சமூகம் மாற்றுத்திறன் ஆகியவை குறித்த அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு விதிமுறையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணைய தளத்தில் (http://www.upsc.gov.in)  விரிவான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். இந்த விரிவான விண்ணப்பப் படிவங்கள், 14.12.2020 முதல் 24.12.2020 மாலை 6 மணி வரை மட்டும் மத்திய பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். விரிவான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவுறுத்தல்களும்அவற்றை சமர்பிப்பதற்கான விவரங்களும் இணையதளத்தில் இடம்பெறும். வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும் முன்பாக, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உரிய பக்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், 25.09.2020 தேதியிட்டு வெளியிடப்பட்ட  இந்திய அரசிதழில் (அசாதாரண) பிரசுரிக்கப்பட்ட புவி அறிவியலாளர் தேர்வு 2020-ன் விதிகளை சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

நேர்முகத் தேர்விற்கு எடுத்து வர வேண்டிய சான்றிதழ்கள் குறித்தும் மாணவர்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு தனித்தன்மை தேர்விற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பிற்காக எடுத்துச் செல்ல வேண்டும்.

முடிவுகளை இங்கே  தெரிந்து கொள்ளலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Result%20-%20Copy%202.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676062

------



(Release ID: 1676166) Visitor Counter : 135


Read this release in: English , Urdu , Hindi , Punjabi