பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
குஜராத்தில் நடைபெறும் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களை அலங்கரிக்கிறது பழங்குடியினரின் கண்கவர் பொருட்கள்
Posted On:
25 NOV 2020 6:10PM by PIB Chennai
பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பான ட்ரைஃபெட், மக்களவைக் குழுவுடன் இணைந்து அரசியலமைப்பு தினத்தை (நவம்பர் 26) முன்னிட்டு குஜராத்தின் கெவாடியாவில் அகில இந்திய பாராளுமன்ற, சட்டமன்ற பேரவைத் தலைவர்களின் 80வது கூட்டத்தை நடத்துகிறது.
2 நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ட்ரைஃபெட் அமைப்பு பழங்குடியினரின் கலைப்பொருட்கள், கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்படும். குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பழங்குடியினரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை குறிக்கும் வகையில் மூங்கிலால் செய்யப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675712
*******************
(Release ID: 1675799)
Visitor Counter : 133