பாதுகாப்பு அமைச்சகம்

15 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘கிளாவ்ஸ்’, ராணுவ தளபதி பாராட்டு

Posted On: 19 NOV 2020 4:40PM by PIB Chennai

தரைவழிப்போர் ஆய்வு மையம் (கிளாவ்ஸ்) 15 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, ராணுவ தளபதியும், கிளாவ்ஸ் புரவலருமான ஜெனரல் எம்.எம்.நரவானே பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்ட தரைவழிப் போர் ஆய்வு மையம் (கிளாவ்ஸ்) கடந்த 2005-ஆம் ஆண்டு தில்லியில் ஏற்படுத்தப்பட்டது. இந்த மையத்தில் நடைபெறும் ஆய்வுகள் மூலம், பாதுகாப்பு கொள்கை தொடர்பான விஷயங்கள் ராணுவத்துக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த மையத்தின் 15 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ‘சீனாவின் அதிகரித்துவரும் சாகசத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் போரின் களங்களை மாற்றுதல்என்ற தலைப்பில் இணைய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே, சிக்கலான தொழில்நுட்பங்களின் திறன் மேம்பாடு, யுக்தி கூட்டாண்மையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவ போர் வீரன் விருதுகளையும் அவர் வழங்கினார். கிளாவ்ஸ் மையத்தின் குளிர்கால இதழையும் அவர் வெளியிட்டார்.

கிளாவ்ஸின் 15 ஆண்டு கால சிறப்பான நடவடிக்கைகளையும், பீல்டு மார்ஷல் மானெக்‌ஷா பெயரில் கட்டுரை போட்டிகள் நடத்தி இளைஞர்கள் இடையே போர் யுக்தி கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் ராணுவ தளபதி பாராட்டினார்.

அர்ப்பணிப்பு, நாட்டின் போர் யுக்திகளை மேம்படுத்தும் முயற்சி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்றவது குறித்த சிந்தனை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் பங்களிப்பு ஆகியவற்றுக்காக கிளாவ்ஸை ராணுவ தளபதி பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674032

**********************(Release ID: 1674071) Visitor Counter : 190


Read this release in: Telugu , English , Urdu , Hindi