அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கடற்பாசியில் இருந்து ஹைட்ரோஜெல் மருந்து : உள்காயத்தை விரைவாக ஆற்றும்

Posted On: 19 NOV 2020 2:00PM by PIB Chennai

கடற்பாசியிலிருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் ஹைட்ரோஜெல்லினால் உள்காயங்கள் மற்றும் சர்க்கரை நோய் விரைவாக குணமடையும் என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயற்படும் மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடற்பாசியில் காணப்படும் ஒரு வகையான புரதம் மற்றும் உண்பதற்கு ஏற்ற சிகப்பு கடற்பாசியில் காணப்படும் தண்ணீரில் கரையும் பாலிசாக்கரைடுகளிலிருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் ஹைட்ரோஜெல்லை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அனைத்து வயதினருக்கும் காயங்களைக் குணமாக்குவதில் இந்த ஹைட்ரோஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673983

*****


(Release ID: 1674030) Visitor Counter : 186