சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆரோக்கியமில்லையேல் நல்ல எதிர்காலமில்லை: சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன்
Posted On:
16 NOV 2020 3:23PM by PIB Chennai
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன் தில்லியில் இருந்து காணொலி மூலம் இன்று தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் துவக்கவுரை ஆற்றிய அவர், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக உலகளாவிய பொது சுகாதாரத்தில் சர்வதேச கூட்டணிகள் மற்றும் முதலீட்டுக்கானத் தேவை குறித்து வலியுறுத்தினார்.
"அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது இல்லாமல், நல்ல எதிர்காலமென்பது இல்லை", என்று அவர் கூறினார். உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் 147-வது அமர்வில் காணொலி மூலம் மீண்டும் நாம் சந்திக்கிறோம் என்று கூறிய அவர், உலகெங்கும் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய நாடு முகமைகள் மற்றும் இதர அமைப்புகளின் பிரதிநிதிகளை வரவேற்றார்.
இது வரை கண்டிராத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறிய திரு ஹர்ஷ் வர்தன், இருந்த போதிலும் 2020-ஆம் வருடம் கூட்டு நடவடிக்கைக்கான ஆண்டு என்றார். ஏழ்மை, பசி, சமநிலையின்மை, பருவநிலை மாற்றம், மாசு, வன்முறை மற்றும் போர் ஆகியவற்றை எதிர்த்து மனிதகுலம் ஏற்கனவே போராடி வந்த நிலையில், பெருந்தொற்று நம்மை ஆட்டுவித்தது என்றார் அவர்.
இருந்த போதிலும், பெரிய அளவில் பதட்டமடையாமல், உலகத்தின் நாடுகளாக நாம் ஒன்றிணைந்தோம். சாதிப்பதற்காக நேர்மறை எண்ணத்தையும், போராட்டத்தையும் நாம் தேர்ந்தெடுத்தோம். நல்ல எதிர்காலத்தை நாம் தேர்ந்தெடுத்தோம் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673161
**********************
(Release ID: 1673179)
Visitor Counter : 186