நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

விவசாயிகளின் நலனில் மத்திய அரசு கூடுதல் அக்கறை: மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 13 NOV 2020 6:36PM by PIB Chennai

மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல், வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரகாஷ் ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் விவசாய அமைப்புகளுடன் 2020 நவம்பர் 13-ம் தேதி புதுதில்லியில் கலந்துரையாடினர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், வேளாண்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். ஊரக பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் வேளாண் துறைக்கு மத்திய அரசு முதன்மை கவனம் அளித்து வருவதாக அவர் கூறினார்.  தற்சார்பு இந்தியா நோக்கி விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்கள்விவசாயிகள் தங்களது பொருட்களை சிறந்த விலைக்கு சுதந்திரமாக விற்பனை செய்ய வழிவகை செய்வதுடன் அவர்களது நலனை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

கலந்துரையாடலின்போது, கடந்த ஆண்டுகளைப் போலவே வேளாண் பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறையில் கொள்முதல் செய்வது தொடரும் என்று அமைச்சர்கள் விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672695

**********************


(Release ID: 1672743) Visitor Counter : 172