புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2020 அக்டோபர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2020 7:16PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2020 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது. அகில இந்திய மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான துணைக் குழுக்கள் மற்றும் குழுக்களுக்கான நுகர்வோர் விலை குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது.
1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும், 1181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினரால், விலை குறித்த புள்ளி விவரங்கள் வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில், 98.1% கிராமங்கள் மற்றும் 97.9% வீத நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்களை என்எஸ்ஓ சேகரித்தது. அவற்றில் 84.3% வீத கிராமங்கள் மற்றும் 89.3% நகர்ப்புற சந்தைகளின் விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அகில இந்திய பணவீக்க விகிதம் புள்ளி விவரம் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றை கீழேயுள்ள இணைப்பில் விரிவாகக் காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672309
*********************
(வெளியீட்டு அடையாள எண்: 1672365)
வருகையாளர் எண்ணிக்கை : 227