கனரகத் தொழில்கள் அமைச்சகம்

மூலப்பொருட்கள் துறையை வலுப்படுத்த அமைச்சகங்களுக்கு இடையேயான குழு

Posted On: 11 NOV 2020 6:11PM by PIB Chennai

மூலப்பொருட்கள் துறையை வலுப்படுத்தும் நோக்கத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தையும், உற்பத்தித் துறையில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலரையும் அடையும் தேசிய இலக்கை எட்டுவதில் மூலப்பொருட்கள் துறை முனைப்புடன் செயல்படும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், மூலப் பொருட்கள் உற்பத்தித் துறை, உலக அளவில் போட்டியிடவும், இந்தியாவை உலக அளவில் உற்பத்தி முனையமாக உருவாக்கவும் 22 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைச்சகங்களுக்கு இடையேயான குழு வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தக் குழு, தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, சுங்க வரி, உலக தரக் கட்டுப்பாடு  போன்ற விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671981

------



(Release ID: 1672038) Visitor Counter : 272