பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய ராணுவக் கல்லூரியில் குடியரசுத் தலைவர் சிறப்பு இருக்கை : குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்

Posted On: 11 NOV 2020 5:47PM by PIB Chennai

தேசிய ராணுவக் கல்லூரி நிறுவப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும், "தேசிய பாதுகாப்பு மற்றும் யுக்தி சார்ந்த ஆய்வுகள்" என்னும் 47-வார சிறப்புப் படிப்பும் நடத்தப்பட்டு  வருகின்றன.

இக்கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு, தேசப் பாதுகாப்புக்கான குடியரசுத் தலைவர் சிறப்பு இருக்கையை நிறுவுவதற்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாதுகாப்புச் செயலாளர் திரு அஜய் குமார், தளபதி ஏர் மார்ஷல் டி சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் இந்த இருக்கையை நிறுவுவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

தேசப் பாதுகாப்புக்கான குடியரசுத் தலைவரின் சிறப்பு இருக்கை கல்லூரியின் அறிவுசார் முதலீட்டை மேம்படுத்துவதோடு, அதன் நம்பகத்தன்மையையும், புகழையும் நிலை நிறுத்துவதில் பெரும்பாங்காற்றும்.

புதுதில்லி தீஸ் ஜனவரி மார்க்கில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் அமையவிருக்கும் தேசப் பாதுகாப்புக்கான குடியரசுத் தலைவரின் சிறப்பு இருக்கைக்கு கல்வி, நிர்வாகம், போக்குவரத்து தொடர்பான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671967

-----

 


(Release ID: 1671999) Visitor Counter : 175