சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை மாதிரியை திறந்து வைத்தார்

Posted On: 09 NOV 2020 6:26PM by PIB Chennai

செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி முன்னிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பவனில் இன்று திறந்து வைத்தார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மிஷன் சக்தி என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் சோதனை கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மிகவும் சவாலான இந்த சோதனையில் மிஷன் சக்தி ஏவுகணை  துல்லியமாக இலக்கை எட்டியதன் மூலம்  விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிப்பதில் உலக அளவில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

          இந்த நிகழ்ச்சியின்போது சாதனை புரிந்த விஞ்ஞானிகளின் குழுவிற்கு மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671470

-----


(Release ID: 1671593) Visitor Counter : 217