பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நோய் கட்டுபாட்டில், சரியான உணவு முறை முக்கிய பங்குவகிக்கிறது : டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 08 NOV 2020 8:31PM by PIB Chennai

 ‘‘நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முறையான உணவு முறை ஆரோக்கியமான மக்களுக்கும் பரிந்துரைக்கப்படலாம். அப்போதுதான் அவர்களுக்கும் நோய் தாக்குதல் ஏற்படாது’’ என மத்திய அமைச்சரும், நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

உலக நீரிழிவு வாரத்தை முன்னிட்டு, ‘டிஜிட்டல் வழி அறிவு மேம்பாடு - நிரிழிவு நோய்க்கு ஏற்ற ஊட்டசத்து’’  என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்குக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுஇதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், துவக்கவுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமராக திரு நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தார். அவர் ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கினார். ஐக்கிய நாடுகள் சபை வாயிலாக சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்கச் செய்தவர் திரு.நரேந்திர மோடிதான்.

 புதிய விதிமுறைகளுடன் வாழ கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சமீப ஆண்டுகளில் முக்கியத்துவம் இழந்திருந்த சுகாதாரமாக இருத்தல் உட்பட மருந்தியல் அல்லாத மேலாண்மை முறைகளை மருத்துவர்கள் இப்போது வலியுறுத்துவதற்கு கொரோனா  வழிவகுத்துள்ளது.

கொரோனா தொற்று முடிந்த பின்பும்சமூக இடைவெளி ஒழுங்கு, சுற்றுப்புற அசுத்தத்தை தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்களை  நாம் கடைபிடிப்பது பலவித தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும். நெருக்கடியிலும், புதிய விதிமுறைகளை கண்டறிய கொவிட் நம்மை தூண்டியதுடன், இந்திய பாரம்பரிய மருத்துவ முறையின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியுள்ளது. நோய்கட்டுப்பாட்டில் சரியான உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முறையான உணவு முறை ஆரோக்கியமான மக்களுக்கும் பரிந்துரைக்கப்படலாம். அப்போதுதான் அவர்களுக்கும் நோய் தாக்குதல் ஏற்படாது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671314

                                                              ----


(Release ID: 1671326) Visitor Counter : 215