வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உடன் சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் சந்திப்பு

Posted On: 08 NOV 2020 8:16PM by PIB Chennai

மத்திய வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் திரு. ஜிதேந்திர சிங்கை, சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் சந்தித்துப் பேசினார்.

தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சிக்கின் மாநிலத்தில், மத்திய அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங்குடன், முதலமைச்சர் திரு.பிரேம் சிங் தமாங் ஆலோசனை மேற்கொண்டார்.

சிக்கிம் மாநிலத்தில் கொவிட் 19 சூழல் குறித்தும், மழை, வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் தினந்தோறும் அக்கறையுடன் விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கும் மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங்க்குக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங்கிடம் இரண்டு திட்டங்கள் குறித்து மனு சமர்பித்தார். சிக்கிம் மாநிலத்தின் சகுங் மாவட்டம், மத்திய அரசின் உயர் சமூக அந்தஸ்து கொண்ட மாவட்டமாக, மாற்றம் பெறும் பட்டியலில் இருப்பது குறித்தும் மத்திய அமைச்சரிடம் அவர் எடுத்துக் கூறினார். இப்போது சிக்கிம் மாநிலத்துக்கு அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் வருவதாகவும், தொடர்ந்து கொவிட் தொற்று பரவல் இருப்பதாகவும் பருவகாலத்திலும் தொடர்வதாகவும் அவர் மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங்கிடம், சிக்கிம் முதலமைச்சர் குறிப்பிட்டார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671308

-----



(Release ID: 1671320) Visitor Counter : 105