விவசாயத்துறை அமைச்சகம்

2020-21 காரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடந்துக் கொண்டிருக்கிறது

Posted On: 06 NOV 2020 5:14PM by PIB Chennai

2020-21 காரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020-21 காரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது.

 

 இந்த மாநிலங்களில் நவம்பர் 5-ஆம் தேதி வரை 236.30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 197.60 லட்சம் மெட்ரிக் டன்னை விட 19.58 சதவீதம் கூடுதலாகும். மொத்தக் கொள்முதலில், பஞ்சாபிலிருந்து மட்டும் 166.97 லட்சம் மெட்ரிக் டன் (70.66%) நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 19.98 லட்சம் விவசாயிகள் ரூபாய் 44612.89 கோடியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும், நவம்பர் 5-ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் ரூபாய் 145.68 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில்27,105.64 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 16387 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் கொள்முதலான 15699.90 மெட்ரிக் டன்னை விட 72.64 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பருத்தி கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 5-ஆம் தேதி வரை ரூபாய் 263613 லட்சம் மதிப்பில் 909659 பேல்கள், 175184 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670672


(Release ID: 1670953)