கலாசாரத்துறை அமைச்சகம்
காந்தியடிகளின் போதனைகள் மனிதகுலத்துக்கு இன்றைக்கும் ஊக்கமளிக்கிறது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
06 NOV 2020 6:00PM by PIB Chennai
புதுதில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷனில் நிறுவப்பட்டுள்ள 360 டிகிரி வீடியோ முப்பரிமாண அனுபவ வட்ட மாடத்தையும், மகாத்மா காந்தி குறித்த டிஜிட்டல் காட்சிப் பொருள்களையும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் கலாச்சார இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடுவதன் ஒரு பகுதியாக இது நிறுவப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, கலாச்சார துறையின் செயலாளர் திரு ராகவேந்திர சிங், காந்தி ஸ்ம்ருதி, தர்ஷன் சமிதியின் இயக்குநர் திரு திபங்கர் கியான் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
காந்தியடிகளின் போதனைகள் மனிதகுலத்துக்கு இன்றைக்கும் ஊக்கமளிக்கிறது என்று தனது உரையில் கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் அவரது தத்துவங்கள் தொட்டு செல்வதாகக் கூறினார்.
"நீடித்த வளர்ச்சியை காந்தியடிகள் என்றுமே வலியுறுத்தினார்," என்று கூறிய அவர், காந்தியடிகளின் கொள்கைகளை டிஜிட்டல் முறையில் பரப்பும் முயற்சியை எடுத்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயல்களை பட்டியலிட்டார்.
சிறந்த மற்றும் சமமான சமூகத்தை கட்டமைப்பதற்காக மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றுமாறு இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670705
**********************
(Release ID: 1670784)
Visitor Counter : 170