ஜல்சக்தி அமைச்சகம்

கங்கையை புதுப்பிக்கும் பணியில் மக்கள் பங்கேற்க வேண்டும்; மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் அழைப்பு

Posted On: 04 NOV 2020 7:20PM by PIB Chennai

கங்கையை புதுப்பிக்கும் தொடர் பணியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது என்று மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத் அழைப்பு விடுத்துள்ளார்.

கங்கை உத்சவம் 2020 என்ற இணைய வழியிலான இறுதி நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத், கங்கை உத்சவம் 2020-ல் தொடர்ச்சியான மற்றும் தூய்மையான கங்கை நதிக்கான பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அழைப்பு எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறியது என்பதை நினைவு கூர்ந்தார்.  “கங்கையை புதுப்பிப்பது தொடர்ச்சியான பணியாக இருக்க வேண்டும் என்பதால், இதில் பொதுமக்கள் பங்கேற்பதை முன்னெடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் அதற்கான கடமை உணர்வை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு கங்கை என்ன வழங்குகிறது என்பதை மக்கள் உணரச் செய்யும்போது மட்டும்தான் இதனை செய்யமுடியும்என்று குறிப்பிட்டார்

மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு கங்கை உத்சவம் போன்ற விழாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், கங்கை புதுப்பிப்பு என்பது அரசின் பணி மட்டுமல்ல, நிலையான பொது மக்கள் ஈடுபாடு மற்றும் உரையாடலை உள்ளடக்கியது என்றும் கூறினார். “நமது நம்பிக்கையை கங்கை வழியில் நாம் கடமையாற்றும் வகையில் மாற்றம் செய்வதற்கு இந்த திட்டம் சாத்தியமாக்குகிறதுஎன்று மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் குறிப்பிட்டார்.  

கங்கை உத்சவம் 2020 விழாவை உலகம் முழுவதிலும் இருந்து இணையம் வழியாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்தனர். இறுதி நாள் விழாவில் கங்கை ஏரியல் திரைப்படம், கங்கை பாக்ஸ், நகர ஆறு மேலாண்மை திட்டம்  ஆகியவைத் தொடங்கி வைக்கப்பட்டன. நமாமி கங்கே திட்டத்தின் தூதுவராக இருப்பதற்கு இந்திய நடிகர் சாச்சா சவுத்ரி சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தியின் ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670163

----


(Release ID: 1670348)