ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்படுத்துதலை துரிதப்படுத்துவதற்காக லே-வுக்கு மத்திய குழு பயணம்

Posted On: 04 NOV 2020 5:03PM by PIB Chennai

தொலைதூர பிரதேசங்கள், வளரத் துடிக்கும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வரும் நிலையில், லடாக் போன்ற உயரமான பகுதிகளில் பாதுகாப்பான குடி தண்ணீர் என்னும் அடிப்படை வசதியை வழங்குவதை உறுதி செய்ய ஜல் ஜீவன் இயக்கம் மும்முரமாக செயல்படுகிறது.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்படுத்துதலைத் துரிதப்படுத்துவதில் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு உதவுதற்காக ஜல் சக்தி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய தேசிய ஜல் ஜீவன் இயக்கக் குழு லே-வுக்கு பயணம் மேற்கொண்டது.

கடல் மட்டத்தில் இருந்து 3,500 கி.மீ உயரத்தில் உள்ள ஸ்டோக் கிராமத்தைப் பார்வையிட்ட மத்திய குழு, கிராமப் பஞ்சாயத்து தலைவர், கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோருடன் உரையாடியது. பொது சுகாதார பொறியியல் துறையின் அலுவலர்களும் அருகில் இருந்தனர்.

2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670063

                                                                      ----



(Release ID: 1670197) Visitor Counter : 105