பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

210 மெகாவாட் லுஹ்ரி பகுதி-I நீர் மின்சார திட்டத்துக்கான ரூ 1810 கோடி முதலீட்டு முன்மொழிதலுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 NOV 2020 3:34PM by PIB Chennai

சட்லஜ் ஆற்றின் மீது அமையவுள்ள 210 மெகாவாட் லுஹ்ரி பகுதி-I நீர் மின்சார திட்டத்துக்கான ரூ 1810.56 கோடி முதலீட்டு முன்மொழிதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 758.20 மில்லியன் அலகுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் இந்திய அரசு மற்றும் மாநில அரசின் ஆதரவோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2019 நவம்பர் 7 அன்று துவக்கி வைக்கப்பட்ட ரைசிங் ஹிமாச்சல் என்னும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

62 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சுற்றுச் சூழலில் இருந்து வருடத்துக்கு 6.1 லட்சம் டன்கள் கரியமில வாயுவை குறைப்பதற்கு இது வழி வகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670011

                                                                ----


(Release ID: 1670085)