ஜல்சக்தி அமைச்சகம்
சட்டீஸ்கரில் ஜல் ஜீவன் திட்ட பணி குறித்து இடைக்கால ஆய்வு
Posted On:
30 OCT 2020 4:41PM by PIB Chennai
ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்து சட்டீஸ்கர் மாநிலத்தில், இடைக்கால ஆய்வு காணொலி காட்சி மூலம் நடந்தது.
நாட்டில் உள்ள பல மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, ஜல் சக்தி அமைச்சகம் காணொலி காட்சி மூலம் இடைக்கால ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
2023ம் ஆண்டுக்குள், 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்க சட்டீஸ்கர் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 45 லட்சம் வீடுகளில், 5.66 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 20 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க சட்டீஸ்கர் அரசு திட்டமிட்டுள்ளது.
2020-21ம் ஆண்டில், சட்டீஸ்கர் மாநிலத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்காக 445.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 15வது நிதி ஆணைய ஊரக மானியத்தின் கீழ், 2020-21ம் ஆண்டில் ரூ.1,454 கோடி வழங்கப்பட்டது. இதில் 50 சதவீதத் தொகை, குடிநீர் மற்றும் துப்புரவு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும். மாநிலத்தின் பல வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை நியாயமாக பயன்படுத்த வேண்டும் என இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டீஸ்கர் மாநிலத்திடம் கூறப்பட்டது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலத்தடி நீர் பிரச்னை உள்ளதால், அது குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் 1.698 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்பது ஆய்வு கூட்டத்தில் தெரியவந்தது. இங்குள்ள 50,518 அங்கன்வாடி மையங்களில், 31,031 மையங்களில் மட்டுமே குடிநீர் வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668841
----
(Release ID: 1668908)
Visitor Counter : 192