சுற்றுலா அமைச்சகம்

பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பாட்டீல் பங்கேற்பு

Posted On: 28 OCT 2020 9:44PM by PIB Chennai

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு.பிரகலாத் சிங் பாட்டீல் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய திரு.பிரகலாத் சிங் பாட்டீல், கொவிட் 19 காரணமாக அனைத்து துறைகளின் பொருளாதார செயல்பாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

குறிப்பாக சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், எனினும், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும்  வலுவான தலைமை காரணமாக பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக  எதிர்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய திரு.பாட்டீல், அந்நிய செலவாணி வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியமான துறையாக இருப்பதால் வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என இரண்டு பிரிவுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பை சுற்றுலாத்துறை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா வணிகம் உயிர் பெறவும், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புத்துயிர் பெறவும் இந்திய அரசு பல்வேறு பொருளாதார ஊக்க தொகுப்புகளையும், பல்வேறு நிதி மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா வணிகத்துக்கு ஆதரவு தர மாநில அரசுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு.பாட்டீல் கூறினார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668271

*******

(Release ID: 1668271)



(Release ID: 1668329) Visitor Counter : 98