நிதி அமைச்சகம்
வரி சிக்கல்களுக்கு தீர்வு காணும் விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது
Posted On:
27 OCT 2020 10:36PM by PIB Chennai
வரி செலுத்துவோர், விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் வரி சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான காலக்கெடு 2020 டிசம்பர் 31-ஆம் தேதியில் இருந்து 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் கூடுதல் கட்டணம் இல்லாமல் வரி செலுத்துவோர் பணம் செலுத்தலாம். வரி செலுத்துவோர், இந்த கூடுதல் சலுகையுடன் தங்கள் வரி சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆவணத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் டிசம்பர் 31-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கான தொகைக்கு மட்டுமே கூடுதல் கட்டணங்கள் ஏதும் இன்றி செலுத்துவதற்கான காலக்கெடு 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த திட்டத்தை விரைவு படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர்கள், மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே காணொலி வாயிலாக உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தில் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நித்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், வரி செலுத்துவோருக்கு இது மிகவும் பயனளிக்கும் என்றார். மேலும் அவர், “நாம் விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தை அதிக நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் முன்னெடுக்க வேண்டும். வரி செலுத்துவோர் நம்மிடம் உள்ள அனைத்து தேவையான வசதிகளையும் பெறும் வகையில் இது இருக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668005
*******
(Release ID: 1668005)
(Release ID: 1668069)
Visitor Counter : 209