அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சர்வதேச மரபணுக்களுடன் ஒப்பிடும் போது இந்திய வரிசைகளில் 32% மரபணு மாறிகள் தனித்துவமாக உள்ளன
Posted On:
27 OCT 2020 7:44PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) உறுப்பு ஆய்வகங்களான சிஎஸ்ஐஆர்-மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், தில்லி மற்றும் சிஎஸ்ஐஆர்-உயிர்மங்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஹைதரபாத் ஆகியவை மேற்கொண்ட 1029 மூலக்கூறு வரிசைகளின் விரிவான ஆய்வின் முடிவுகள் 'நியுக்ளிக் ஆசிட் ரிசெர்ச்' என்னும் அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன.
சர்வதேச மரபணுக்களுடன் ஒப்பிடும் போது இந்திய வரிசைகளில் 32 சதவீதம் மரபணு மாறிகள் தனித்துவமாக உள்ளன என்று இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
தற்போதைய இந்திய மக்கள் தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் மரபணு மாறிகளின் சேகரிப்பை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் 1029 இந்திய மரபணு ஆதாரம் வழங்குகிறது.
மக்கள் தொகை மற்றும் தனிநபர் அளவுகளில் மரபணுக்களைப் பற்றி சிறப்பாக புரிந்து கொள்வதற்கு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆதாரம் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை http://clingen.igib.res.in/indigen என்னும் இணைய முகவரியில் காணலாம். சிஎஸ்ஐஆர்-மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், தில்லி மற்றும் சிஎஸ்ஐஆர்-உயிர்மங்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஹைதரபாத்தின் ஆராய்ச்சி குழுக்களை இந்த ஆராய்ச்சிக்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667949
********
(Release ID: 1667949)
(Release ID: 1668042)
Visitor Counter : 279