சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் எனது தேசத்தை பார் என்ற இணையத் தொடரில் பண்டி: ராஜ்புத் தலைநகரின் மறந்துவிட்ட பாரம்பரிய கட்டிடக் கலை என்ற தலைப்பில் இனிய கருத்தரங்கு

Posted On: 26 OCT 2020 4:58PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் எனது தேசத்தை பார் என்ற இணையத் தொடரில் கடந்த 24 ஆம் தேதி "பண்டி: ராஜ்புத் தலைநகரின் மறந்துவிட்ட பாரம்பரிய கட்டிடக் கலை" என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய கருத்தரங்கு ராஜஸ்தானில் உள்ள பண்டி மாவட்டத்தைப் பற்றி அமைந்திருந்தது. இடைக்கால இந்தியாவின் சக்தி வாய்ந்த ராஜ்யங்களுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க சிறிய பகுதிகள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. டெல்லி ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் உதைப்பூர் அகமதாபாத் லக்னோ உள்ளிட்ட இடங்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம், சிறிய நகரங்கள் மற்றும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தென்கிழக்கு ராஜஸ்தானில் அமைந்துள்ள ஹடா ராஜ்புத்தின் தலைநகரமான பண்டி அப்படிப்பட்ட ஓர் பிரசித்தி பெறாத தலம் ஆகும். இந்த நகரத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலை குறித்து நகர்ப்புற கட்டிட வடிவமைப்பாளரான திரு சாருதத்தா தேஷ்முக், இணைய கருத்தரங்கில் விரிவாக விளக்கினார். பண்டி நகரத்தின் புராதன கட்டிடக் கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் தென் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் பண்டியின்  சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை வழங்கினார்.

பண்டியைச் சுற்றி ஏகப்பட்ட கோவில்கள் இருந்ததால் அது சிறிய காசி என்று அழைக்கப்படுகிறது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத் தன்மையை வெளிக்காட்டும் வகையில் எனது தேசத்தை பார் என்ற தலைப்பில் இணைய கருத்தரங்குத் தொடரை சுற்றுலாத் துறை அமைச்சகம் நடத்துகிறது. இந்தத் தொடரை

https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

என்ற இணையதளத்திலும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் சமூக இணையதளங்களிலும் காணலாம். அடுத்த இணைய கருத்தரங்கு 'கங்கையில் சொகுசுக் கப்பல்' என்ற தலைப்பில் வரும் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667599

**********************


(Release ID: 1667622) Visitor Counter : 257