அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டிசிஎஸ்-உடன் இணைந்து இந்தியாவின் முன்னேறிய உற்பத்தித் துறையில் புதிய போக்கை ஐஐடி உருவாக்கியுள்ளது
Posted On:
23 OCT 2020 8:55PM by PIB Chennai
தொலைதூரத்தில் இருந்து தொழிற்சாலை செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான இண்டஸ்ட்ரி 4.0 என்னும் புதுமையான தொழில்நுட்பத்தை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) காரக்பூர் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், டிசிஎஸ்-உடன் இணைந்து இந்தியாவின் முன்னேறிய உற்பத்தித் துறையில் புதிய போக்கை ஐஐடி உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலை செயல்பாடுகளை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்துவதோடு, தரத் திருத்தங்களையும் உடனடியாக செய்யலாம்.
பெருந்தொற்றின் காரணாமாக பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரியத் தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கும் இது உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667166
------
(Release ID: 1667215)
Visitor Counter : 255