அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
8-10 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய நட்சத்திரங்களின் ரகசியத்தை புனே மற்றும் பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
Posted On:
23 OCT 2020 6:57PM by PIB Chennai
எட்டு முதல் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிக அதிகமான அளவில் உருவான நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதற்கு பின் குறைந்தது ஏன் என்று புரியாமல் நீண்ட காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
தற்போது, பால்வெளிகளின் அணு ஹைட்ரஜன் அளவுகளை கணக்கிட்டு, அதனைக் கொண்டு நட்சத்திரங்களின் உருவாதலில் ஏன் வீழ்ச்சி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வாயு மற்றும் நட்சத்திரங்களைக் கொண்டே பால்வெளிகள் உருவாகின்றன. காலப்போக்கில் வாயு நட்சத்திரங்களாக மாறுகிறது. இதற்கு தேவைப்படும் எரிபொருளான அணு ஹைட்ரஜனின் அளவே நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இதைப் பற்றிய தேசிய ரேடியோ வானியற்பியல் மையம், புனே, மற்றும் ராமன் ஆய்வு மையம், பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் அணு சக்தித் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667108
-----
(Release ID: 1667176)
Visitor Counter : 135