சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய பிரதேசத்தில் கொவிடுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை செயல்படுத்துவது தொடர்பாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை
Posted On:
21 OCT 2020 5:43PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய பிரதேச மாநிலத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவலை, ஒட்டுமொத்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "இந்தியாவில் தற்போது 89 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மத்தியபிரதேசத்தில் 90.55 சதவிகிதம் பேர் குணம் அடைந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.73 சதவிகிதம், இது தேசிய சராசரியை விட சற்று கூடுதலானது" என்று கூறினார். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைவரும் கொவிட் சரியான நடத்தைமுறையை பின்பற்றினால், நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் அடிக்கடி கை கழுவுவது என்ற விழிப்புணர்வை நாட்டின் அனைத்து குடிமக்களிடமும் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த மக்கள் இயக்கத்திற்காக பிரதமருக்கு அமைச்சர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
எதிர்வரும் குளிர்காலம் மற்றும் நீண்ட பண்டிகைக் காலங்களில் நோய்த்தொற்றின் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு மாநில அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666474
-----
(Release ID: 1666605)
Visitor Counter : 180