பிரதமர் அலுவலகம்
காவலர் நினைவு தினத்தில், பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்துகிறார்
प्रविष्टि तिथि:
21 OCT 2020 11:43AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, காவலர் நினைவு தினமான இன்று, பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“இன்று, நாடு முழுவதும் உள்ள காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் காவலர் நினைவு தினம். பணியின் போது உயிரிழந்த காவலர்கள் அனைவருக்கும் நாம் புகழஞ்சலி செலுத்துகிறோம். அவர்களது தியாகமும், சேவையும் என்றும் நினைவு கூரப்படும்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது முதல் கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண்பது வரை, பேரிடர்களின் போது உதவி செய்வது முதல் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவது வரை, எந்தவித தயக்கமுமின்றி நமது காவல் துறையினர் எப்பொழுதும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனர். நமது நாட்டு குடிமக்களுக்கு உதவுவதற்காக எப்பொழுதும் தயாராக இருக்கும் அவர்களது தன்மையையும், அர்ப்பணிப்பையும் நினைத்து நாம் பெருமை கொள்கிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1666324)
आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam