பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்தமான, நிலையான எரிசக்தி வளங்களை அளிப்பதுதான் அரசின் தலையாய நோக்கம்: ஹைட்ரஜன் இயற்கை எரிவாயு நிலையத்தை தொடங்கி வைத்து, திரு தர்மேந்திர பிரதான் பேச்சு
Posted On:
20 OCT 2020 7:11PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்து, சோதனை முயற்சியில், ஹைட்ரஜன் கலந்த இயற்கை எரிவாயுவில் இயங்கும் நகர பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார். ஹைட்ரஜனுடன் கலந்த இயற்கை எரிவாயு, சுத்தமான வாகன எரிபொருளாகவும், வாகனங்கள் வெளியிடும் மாசை குறைக்கும் தன்மை கொண்டதாகவும் விளங்குவதால் இதன் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கு சுத்தமான மற்றும் நிலையான எரிபொருள் வழங்குவது அரசின் முதன்மையான நோக்கம் என்றார். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில், சுத்தமான எரிபொருளை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியேற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். ஹைட்ரஜனுடன் கலந்த இயற்கை எரிவாயுவை தயாரித்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் விபரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666180
----
(Release ID: 1666242)
Visitor Counter : 199