மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஜாம்ஷெட்பூர் என் ஐ டி-யின் வைர விழா சொற்பொழிவு அரங்கத்தை மத்திய கல்வி அமைச்சர் மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2020 6:39PM by PIB Chennai
ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவன (என் ஐ டி) வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைர விழா சொற்பொழிவு அரங்கத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் இன்று திறந்து வைத்தார்.
ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கருணேஷ் குமார் சுக்லா மற்றும் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேடையில் இருந்தவர்களையும், இணையம் மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களையும் பேராசிரியர் கருணேஷ் குமார் சுக்லா வரவேற்றார்.
விழாவில் பேசிய திரு பொக்ரியால், கல்வித்துறையின் தலைமையகமாக வரும் காலத்தில் இந்தியா மாறும் என்றும், நாளந்தா மற்றும் தக்சசீலா பல்கலைகழகங்களில் முன்பு இருந்ததைப் போல உயர் கல்விக்காக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கி மாணவர்கள் வருவார்கள் என்றும் கூறினார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள சொற்பொழிவு அரங்க வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளும் தொழில்நுட்பங்களும் இடம் பெற்றிருப்பது குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666165
----
(வெளியீட்டு அடையாள எண்: 1666241)
வருகையாளர் எண்ணிக்கை : 148