தேர்தல் ஆணையம்
பீகார் சட்டசபைக்கான 2020-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கருப்பு பண நடமாட்டத்தை சிறந்த முறையில் தடுப்பதற்காக 67 செலவு பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது
प्रविष्टि तिथि:
20 OCT 2020 6:06PM by PIB Chennai
பார்வையாளர்கள் தங்களது பணியை மாநிலம் முழுக்க மேற்கொண்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான செலவுகள் கண்காணிப்பின் போது ரூ 35.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பீகார் சட்டசபைக்கான 2020-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான சிறப்பு செலவு பார்வையாளர்களாக நிபுணத்துவமும், நேர்மையும் மிக்க இந்திய வருவாய் பணி முன்னாள் அதிகாரிகளான திருமிகு மது மகாஜன் மற்றும் திரு பி ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
உரிய ஆய்வுக்கு பிறகு, 91 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவு தொடர்பாக அதிக கண்காணிப்பு தேவைப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 881 பறக்கும் படைகளும், 948 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பீகார் மற்றும் அண்டை மாநிலங்களின் மூத்த அதிகாரிகளோடு செலவு கண்காணிப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கூட்டங்களை நடத்தி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666152
----
(रिलीज़ आईडी: 1666197)
आगंतुक पटल : 108