ஜல்சக்தி அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் தசாப்தங்களாக பெண்கள் எதிர்கொண்டு வந்த துயரங்கள் மற்றும் வலிகளை ஜல் ஜீவன் இயக்கம் போக்கும்
இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2020 4:18PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கத்தை ஏற்றுக் கொண்டு, மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் வட்டத்தில் இருக்கும் மஜ்குவான் குர்த் சமுகம் கிராம செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அங்குள்ள பெண்கள் தசாப்தங்களாக எதிர்கொண்டு வந்த துயரங்கள் மற்றும் வலிகளை ஜல் ஜீவன் இயக்கம் போக்கும்.
1,652 நபர்கள் வசிக்கும் மஜ்குவான் குர்த்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாகும். தன்னுடைய அனைத்து தேவைகளுக்கும் நிலத்தடி நீரையே அந்த கிராமம் 100 சதவீதம் நம்பி வந்தது.
கோதுமை சாகுபடிக்காக அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அங்கு குடி தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் இதற்கு தீர்வு காணப்படுகிறது.
2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666116
------
(வெளியீட்டு அடையாள எண்: 1666145)
வருகையாளர் எண்ணிக்கை : 165