நிதி அமைச்சகம்
மகாராஷ்டிராவின் சாலை மேம்பாட்டுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 177 மில்லியன் டாலர் கடன்
प्रविष्टि तिथि:
19 OCT 2020 5:45PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் மேம்படுத்த 177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், மத்திய அரசும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு சமீர் குமார் காரே, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குனர் திரு கெனிச்சி யோகாயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இத்திட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற சாலைகள் இணைப்பை மேம்படுத்தும், வேலை வாய்ப்பை உருவாக்கும், இதன் மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும் என திரு. சமீர் குமார் காரே கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665841
(रिलीज़ आईडी: 1666046)
आगंतुक पटल : 258