தேர்தல் ஆணையம்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான சிறப்பு காவல் பார்வையாளராக திரு எம் கே தாசை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2020 8:56PM by PIB Chennai
1977 பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திரு மிருனால் காந்தி தாசை மத்தியப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான சிறப்பு காவல் பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது
 
சிறப்பு போலீஸ் பார்வையாளராக இடைத்தேர்தல் நடத்தப்படும் முறையையும் அதற்கான தயார் நிலையையும், குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் திரு தாஸ் கண்காணிப்பார்.
 
மணிப்பூரின் காவல்துறை தலைமை இயக்குநராக ஓய்வு பெற்ற திரு தாஸின் அனுபவம் மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு, 2020 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற தேர்தலுக்கான சிறப்பு காவல் பார்வையாளராக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
 

(வெளியீட்டு அடையாள எண்: 1665458) வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu