மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐஐடி ஜோத்பூரில் புதுமைகள் மற்றும் வழிகாட்டுதல் மையம் மற்றும் விளையாட்டு வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' திறந்து வைத்தார்

Posted On: 16 OCT 2020 8:29PM by PIB Chennai
ஜோத்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) புதுமைகள் மற்றும் வழிகாட்டுதல் மையம் மற்றும் விளையாட்டு வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் இன்று திறந்து வைத்தார்.
 
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, ஐஐடி ஜோத்பூரின் ஆட்சி மன்ற குழு தலைவர் டாக்டர் ஆர் சிதம்பரம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 
நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர், சுமார் 850 ஏக்கர் நிலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி அழகிய கல்வி வளாகமாக உருவாக்கியதற்காகவும், கிரிஹா ஐந்து நட்சத்திர தரச்சான்று பெற்றதற்காகவும் ஐஐடி ஜோத்பூர் குறித்து திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.
 
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, யோகா மற்றும் கபடி ஆகியவற்றுக்கான சர்வதேச தரத்திலான வசதிகள் அமைச்சர் திறந்து வைத்த விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
 
 
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

(Release ID: 1665455) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Hindi , Manipuri